இலங்கையில் நடப்பது என்ன? அடுத்தடுத்து அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்

#SriLanka
Nila
4 years ago
இலங்கையில் நடப்பது என்ன? அடுத்தடுத்து அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை கிடையாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்றிரவு (21) முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4