சாதாரண தர பரீட்சை குறித்து பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Reha
4 years ago
சாதாரண தர பரீட்சை குறித்து பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2021 (2022) வருடத்திற்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள பரீட்சாத்திகளுக்கு விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக மேற்கொள்ளும் முறை குறித்து பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதற்கமைவாக தனிப்பட்ட பரீட்சாத்திகளின் விண்ணப்பங்கள் 2021.12.20 ஆம் திகதி தொடக்கம் 2022.01.20 ஆம் திகதி வரையில் இணையவழி ஊடாக கோரப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.

இதற்காக விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் ஆலோசனை மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www..doenets.lk அல்லது Exams SRI LANKA என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4