மாடுகளை மேய்க்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு! வவுனியாவில் சம்பவம்

#Vavuniya
Mayoorikka
4 years ago
மாடுகளை மேய்க்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு! வவுனியாவில் சம்பவம்

வவுனியா கொக்குவெளி பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் மாயமாகிய நிலையில் நேற்று (20) இரவு 11.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்

வவுனியா கொக்குவெளி பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன் ஒருவன் நேற்று குதித்துள்ளார்.

குறித்த சிறுவன் அந்தப்பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்ததுடன், கிணற்றில் குளிக்க செல்வதாக அருகில் இருந்த இளைஞர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்

இந்நிலையில் அவர் தனது ஆடைகளை கழற்றி கிணற்றின் அருகில் வைத்துவிட்டு கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் கிணற்றுக்குள் சென்றுபார்த்தபோது, அந்த இளைஞரை காணவில்லை.

இதனையடுத்து ஊர்மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கிராமத்தவரகள் கிணற்றினுள்ள இறங்கி தேடுதல் நடாத்திய நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த சிறுவனை மீட்க முடியவில்லை.

ஆயினும் கிராமமக்களின் தொடர்சியான முயற்சியால் கிணற்றுநீர் வெளியில் இறைக்கப்பட்டு இரவு 11.30 மணியளவில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

குறித்த சம்பவத்தில் அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரனைகளை மாமடு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4