இலங்கையில் எரிவாயு வெடிப்பதற்கான காரணம் வெளியானது!

#SriLanka #Litro Gas
Nila
4 years ago
 இலங்கையில்  எரிவாயு வெடிப்பதற்கான காரணம் வெளியானது!

எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றமே, எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் நேர்வதற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

எரிவாயு தொடர்பான விபத்துக்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பலகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதி வரை 847 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இந்த குழுவின் உறுப்பினரும், மேல் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபருமான தேசபந்து தென்னக்கோன் நேற்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4