அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.

#SriLanka #Sri Lanka President
அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.

ஜனாதிபதியினால் அமைச்சரவையில் வெகு சீக்கிரம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இது பெரும்பாலும் நடக்கும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தை போன்று ஜனாதிபதியின் இறுதி நிமிடத்தில் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் நாடு திரும்பியதும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் நேற்று பல அமைச்சர்களிடம் ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பாக வினவியபோதும் இந்த மாற்றம் குறித்து தங்களுக்குத் தெரியாது என கூறினர்.

ஆனால் அரசாங்கத்திற்குள் பரவும் வதந்திகளை தாங்களும் கேட்டிருப்பதாக உறுதிபடுத்தியுள்ள அவர்கள், யார் யார் மாற்றங்களை எதிர்கொள்வார்கள் என்ற விபரம் தெரியாது என்றும் குறிப்பிட்டனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற மாற்றம் ஜனாதிபதியால் தெரிவிக்கப்படும் வரை இது பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4