இவ்வருடம் மதுவரித்திணைக்களத்தினால்   4882 பெண்கள் கைது 

Prathees
4 years ago
இவ்வருடம் மதுவரித்திணைக்களத்தினால்   4882 பெண்கள் கைது 

இந்த ஆண்டு டிசம்பர் 15ம் திகதி வரை இலங்கை மதுவரித் திணைக்களம் 36,067  சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்ட 4,882 பேர் பெண்கள் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இதேவேளைஇ சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 400 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து  கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ரூபா 116,105,276.00 (116 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4