புதிய கொரோனா வைரஸ் இறப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்ட இங்கிலாந்து

Reha
4 years ago
புதிய கொரோனா வைரஸ் இறப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்ட  இங்கிலாந்து

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82,886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.

இங்கிலாந்தில் கடந்த 15-ம் தேதி 78,610 பேருக்கும், 16-ம் தேதி 88,376 பேருக்கும், 17-ம் தேதி 93,045 பேருக்கும், 18-ம் தேதி 90,418 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் இங்கிலாந்தில் 82,886 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் 45 பேர் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97.83 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 14.30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4