கடும் குளிர் பனியில் படகில் பயணித்த புலம்பெயர்ந்தவர்களை மீட்ட பிரித்தானிய எல்லை பாதுகாப்புப்படையினர்

Reha
4 years ago
கடும் குளிர் பனியில் படகில் பயணித்த புலம்பெயர்ந்தவர்களை மீட்ட பிரித்தானிய எல்லை பாதுகாப்புப்படையினர்

பிரான்சிலிருந்து, கடுமையான மூடுபனியினூடே சிறு படகொன்றில் சுமார் 45 புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், இங்கிலாந்தின் கென்ட் பகுதியில், துங்கென்ஸ் என்ற இடத்தில், எல்லை பாதுகாப்புப்படையினர் அவர்களை மீட்டுக் கரை சேர்த்துள்ளனர்.

குளிரில் நடுங்கியபடி, களைத்துப்போன நிலையில் காணப்பட்ட அந்த புலம்பெயர்வோரை, பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர் இந்த ஆண்டில் மட்டும் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை வந்தடைந்துள்ள புலம்பெயர்வோரின் எண்ணிக்கை 26,792 ஆகியுள்ளது.

ஆனால், 2020இல் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை வந்தடைந்த புலம்பெயர்வோரின் எண்ணிக்கை சுமார் 8,410 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4