தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து: இருவர் பலி

#Accident
Mayoorikka
4 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகாலையில்  இடம்பெற்ற விபத்து: இருவர் பலி

கொட்டாவையில் இருந்து மத்தல வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

பரட்டுவ மற்றும் கபுதுவ ஆகிய இடங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மத்தல நோக்கி பயணித்த பாரவூர்தி அதிவேக நெடுஞ்சாலையில்  கவனக்குறைவாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அதே திசையில் வந்த பௌசர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பாரவூர்தியில் மோதியுள்ளது.

இதில், பாரவூர்தியில் பயணித்த கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பௌசர் வாகனத்தின் சாரதியான 61 வயதுடை நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பௌசர் வாகனத்தின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில்  மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4