இஸ்ரேலில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும் 4ஆம் கொவிட் தடுப்பூசி

Reha
4 years ago
இஸ்ரேலில் 60 வயதிற்கு  மேற்பட்டவர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும் 4ஆம் கொவிட் தடுப்பூசி

இஸ்ரேலில் நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும் 4ஆம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

ஒமைக்ரோன் பரவலுக்கு மத்தியில் போராடி வரும் நிலையில், இஸ்ரேல் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உள்ளக முடக்கநிலையைத் தவிர்க்கும் நோக்கில் பயண மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளை விதிக்க அங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 4ஆம் தடுப்பூசிக்கு தயாராகுமாறு தாம் உத்தரவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில், 4ஆம் தடுப்பூசியை செலுத்தும் முதலாவது நாடாக இஸ்ரேல் பதிவாகும் என அந்த நாட்டின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் தங்களைப் பின்தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4