யாழில் பரவும் மர்மக் காய்ச்சல். சிலர் அடையாளம்.

#SriLanka #Jaffna #Health
யாழில் பரவும் மர்மக் காய்ச்சல். சிலர் அடையாளம்.

யாழ். தென்மராட்சியில் நெருப்புக்காய்ச்சலுக்கு ஒத்த காய்ச்சல் பரவியுள்ளதாக சுகாதார வைத்திய பணிமனை தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் சுகாதார துாய்மையற்றதன் காரணமாக பரவும் என அறியப்பட்டுள்ளது

இந்த காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நீங்கள் உள்ளெடுக்கும் நீர் மற்றும் உணவு என்பவற்றின் சுகாதாரத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள்

கொதித்தாறிய அல்லது குளோறின் மூலம் பரிகரிப்பு செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்துங்கள்
பாதுகாப்பாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை கொள்வனவு செய்து உண்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

  • வீட்டில் உடனுக்குடன் சமைத்த உணவை உண்ணுங்கள்
  • சமைத்த உணவுகளை பாதுகாப்பாக மூடி வைத்துக் கொள்ளுங்கள்
  • சமைக்காது உண்ணும் பழங்கள், பச்சை இலை வகைகள் என்பவற்றை நன்கு கழுவி உண்ணுங்கள்
  • உணவு தயாரித்தல், பரிமாறல், மலசலகூட பாவனை ஆகியவற்றின் பின்னர் சவர்காரம் இட்டு கைகளை சுத்தம் செய்யுங்கள்
  • நோய் அறிகுறிகள் ஏற்படின் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்
  • இவற்றை அன்றாடம் பின்பற்றினால் குறித்த நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4