புதன்கிழமை முதல் பேருந்து கட்டணம் உயரும்

#Bus
Prathees
4 years ago
புதன்கிழமை முதல் பேருந்து கட்டணம் உயரும்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எதிர்வரும் புதன்கிழமை முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கு இடையில் இன்று போக்குவரத்து அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்படி, கட்டண திருத்தம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை வேன் கட்டணங்கள் 20 வீதத்தால் அதிகரிக்கப்படுமென மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைகள் சங்கம் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4