பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்குமாம்! அமைச்சரின் கருத்து

#SriLanka
Prathees
4 years ago
பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்குமாம்! அமைச்சரின் கருத்து

நாட்டில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொள்ளை நோயிலிருந்து உலகம் விடுபடும் வரை பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயரும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு கையிருப்பு பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.   அவை மிகவும் திறமையாக கையாளப்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தவறாது முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4