எரிபொருள் விலை அதிகரிப்பை  உடனடியாக நிறுத்துமாறு  எதிர்க்கட்சி கோரிக்கை

#Sajith Premadasa #Colombo
Prathees
4 years ago
எரிபொருள் விலை அதிகரிப்பை  உடனடியாக நிறுத்துமாறு  எதிர்க்கட்சி கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சமகி ஜனபலவேக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சமகி ஜனபலவேகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எண்ணெய் விலையை உயர்த்தி மக்களை மீண்டும் வாணலில் இருந்து  அடுப்புக்குள் தள்ளியுள்ளனர்.

இரவில் மக்கள் தூங்கும் போது உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதும் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை என ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளைஇ நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தமது கட்டுப்பாட்டில் தீர்வு காணப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4