மூச்சு திணறி மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சம்பவம்

#Death
Mayoorikka
4 years ago
மூச்சு திணறி மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சம்பவம்

மூச்சுத் திணறலுக்கு உள்ளான மூன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது,

இணுவில் தெற்கைச் சேர்ந்த  யுகன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

நேற்று அதிகாலை 3.30 மணியளலில் தாய்ப்பால் குடித்த குழந்தை, காலை 6 மணியளவில் அசைவற்றுக் காணப்பட்டுள்ளது.

பெற்றோர் உடனடியாகக் குழந்தைய யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

அதேவேளை, நேற்றுமுன்தினம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4