நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும்: ஞானசார தேரர்

Mayoorikka
4 years ago
நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும்: ஞானசார தேரர்

நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது என ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த அவர் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி உருவாக்கத்தின் போதும், அதில் தன்னை தலைவராக நியமித்துள்ளதற்கும் பல்வேறு விமர்சனங்கள், அவதூறு கருத்துக்கள் எழுவதை அவதானித்தே வருகின்றேன். ஆனால் இவற்றை நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை என்றும் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4