இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை!

#SriLanka
Nila
4 years ago
இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை!

எதிர்வரும் மூன்று வாரங்களில், இலங்கையில் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (23) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இதை குறிப்பிட்டார்.

மேலும், நேற்று (22) புதிதாக இனங்காணப்பட்ட 3 தொற்றாளர்கள் உட்பட இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 7 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் தொடர்பான ஆய்வின் மூலம் இது தெளிவாகிறது என சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் நாடு மிகவும் துரதிஷ்டவசமான நிலைமைக்கு உள்ளாவதை தடுப்பதற்கு பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4