வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!

#SriLanka
Nila
2 years ago
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!

அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்காக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கவேண்டிய 4.7 பில்லியன் வருமானத்தை நாடு இழந்துள்ளது.

மீண்டும் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன் இன்னும் சில மாதங்களில் அதன் மூலமான வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வாய்ப்புகள் கிட்டுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் டொலர் தட்டுப்பாடு நிலவும் இக்காலகட்டத்தில் டொலர் மூலமான லொத்தர் விற்பனையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை காலத்திற்குப் பொருத்தமான ஒரு செயற்பாடாகும்.

அதன் மூலம் அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் எமக்குக் கிட்டுகிறது.அதற்கு வெளிநாட்டமைச்சு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும். அந்நிய செலாவணியில் நிலவும் சிக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில் இது ஒரு புதிய முறையாக அறிமுகப்படுத்துவது பாராட்டத்தக்கது என்றார்.