எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து : பாடசாலை போக்குவரத்து கட்டணம் உயர்வு!

Reha
4 years ago
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து : பாடசாலை போக்குவரத்து கட்டணம் உயர்வு!

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் 25 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சலுகை விரைவில் வழங்கப்பட்டால், கட்டண அதிகரிப்பு வீதத்தில் மாற்றத்தை செய்ய முடியும் என சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இல்லை என்றால், தமது கட்டண அதிகரிப்பு 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4