47 ஆயிரத்து 120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

Prabha Praneetha
4 years ago
 47 ஆயிரத்து 120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கைக்கு இம்மாதம் முதல் 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மொத்தமாக ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 109 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளமாக மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த ஊக்குவிப்பு பிரசாரம் எதிர்வரும் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்கள், வெளிநாடுகளில் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான சர்வதேச மாநாடுகளிலும் இலங்கை ஊக்குவிக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4