இந்தியாவிற்கு விரைந்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Mayoorikka
4 years ago
இந்தியாவிற்கு விரைந்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று காலை நாட்டைவிட்டு அவர், புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்றும் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டே அவர் சென்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, திருப்பதியில் இரண்டுநாட்கள் தங்கியிருப்பார். அத்துடன் திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தோஷ நிவர்த்திகாகவே அவர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4