கனடாவில் வாழ்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்..

Prabha Praneetha
2 years ago
கனடாவில் வாழ்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்..

தற்காலிக வாழிட உரிமம் வைத்திருப்போர் தங்கள் வாழிட உரிமம் காலாவதியானதும் கனேடிய புலம்பெயர்தல் சட்டத்தின்படி, கனடாவை விட்டு வெளியேறிவிடவேண்டும்!

புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு நெறிமுறைகளின் 181ஆவது பிரிவின்படி, தற்காலிக வாழிட உரிமம் வைத்திருக்கும் ஒருவர், அது காலாவதியாகுமுன்னரே கனடாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை அதிகாரப்பூர்வமாக நீட்டிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்...

இந்த விண்ணப்பம் அளிப்பதற்கு தகுதியுடையவர்கள், கனடாவின் புலம்பெயர்தல் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அவர்களது விண்ணப்பத்தின்மீது முடிவெடுக்கும் வரையில் கனடாவில் தங்கியிருக்கலாம். இந்த காலகட்டத்திலும், சம்பந்தப்பட்டவர் கனேடிய தற்காலிக வாழிட உரிமம் கொண்டவராகவே கருதப்படுவார்.

இந்த காத்திருக்கும் நிலை, maintained status என அழைக்கப்படுகிறது.
இந்த maintained status நிலையிலிருந்து பலன் பெறவேண்டுமானால், ஒருவர் கனடா அரசின் சட்டதிட்டங்களையும் நெறிமுறைகளையும் கவனமாக பின்பற்றவேண்டும்.

ஒவ்வொருவரும்  கனடாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை அதிகாரப்பூர்வமாக நீட்டிப்பதற்கு விண்ணப்பிப்பவர், தனது தற்காலிக வாழிட உரிமம் எப்போது காலாவதியாகும், தங்கள் விண்ணப்பம் கனடாவில் தாங்கள் தற்காலிகமாக வாழும் நிலையை எவ்வகையில் பாதிக்கக்கூடும், இந்த நீட்டிக்கப்படும் காலகட்டத்தின்போது கனடாவில் தங்கியிருக்கும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

முதலாவதாக  நீங்கள் உங்கள் தற்போதைய வாழிட உரிமம் காலாவதியாகும் முன் உங்கள் நீட்டிப்பு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

அதோடு கனடாவின் புலம்பெயர்தல் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கடைசி நேர பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, போதுமான கால அவகாசம் இருக்கும்போதே விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

இரண்டாவதாக, உங்கள் நீட்டிப்பு விண்ணப்பம், உங்களுடைய தற்போதைய சூழலை எவ்விதம் பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒருவர் தனது தற்போதைய அனுமதி (படிப்பு அல்லது வேலை) காலாவதியாகும் முன்னரே அதைப் புதுப்பிக்கக்கோரும் விண்ணப்பத்தை செலுத்தும் பட்சத்தில், அவர் தொடர்ந்து கனடாவில் படிக்கவோ அல்லது வேலை செய்யவோ (அதாவது, அவர் எதற்காக கனடாவிலிருக்கிறாரோ அதை) செய்யலாம் என்கிறது கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.

ஆனால், தற்போது வைத்திருப்பதிலிருந்து வேறொரு அனுமதி கோரி நீங்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், நீங்கள் படிப்பு அல்லது வேலை (எதை நீங்கள் செய்துவந்தீர்களோ, அதை) செய்வதை நிறுத்திவிடவேண்டும்.

  ஆனால், தற்போது வைத்திருப்பதிலிருந்து வேறொரு அனுமதி கோரி நீங்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், நீங்கள் படிப்பு அல்லது வேலை  செய்வதை நிறுத்திவிடவேண்டும்.

உதாரணமாக, வேலை செய்யும் ஒருவர் கல்வி அனுமதி கோருவாரானால், தனது தற்போதைய அனுமதி காலாவதியான உடனேயே வேலை செய்வதை நிறுத்திவிடவேண்டும்.

மூன்றாவதாக, கனடாவிலிருந்து வெளியேறுவது உங்கள் தற்காலிக வாழிட உரிம நிலையை எவ்விதம் பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த காத்திருக்கும் நிலை அல்லது maintained status, நீங்கள் கனடாவிலிருப்பது வரைதான். 

நீங்கள் இந்த காத்திருக்கும் நிலை அல்லது maintained statusஇன் போது கனடாவை விட்டு வெளியேறுவீர்களானால், மீண்டும் நீங்கள் கனடாவுக்குத் திரும்பும்போது, உங்கள் நீட்டிப்பு விண்ணப்பம் குறித்து முடிவெடுக்கப்படும் வரை நீங்கள் விட்டுச் சென்ற படிப்பையோ வேலையையோ தொடர முடியாது. 

அத்துடன், நீங்கள் உங்கள் விண்ணப்பம் குறித்த முடிவுக்காக காத்திருக்கும் காலகட்டத்தில் உங்கள் நிதித்தேவைகளை சந்திக்கும் அளவுக்கு உங்களிடம் போதுமான நிதி இருப்பதையும் நீங்கள் கனடாவுக்குள் நுழையும்போதே, எல்லை சேவை ஏஜன்சி அலுவலரிடம் நிரூபிக்க வேண்டிவரலாம்.

ஆகவே, நீங்கள் நீங்கள் maintained statusஇல் இருக்கும்போது கனடாவிலிருந்து வெளியேறினால், உங்கள் வேலை அல்லது கல்விக்கான உரிமையை விட்டு விடுகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமாகும்.

உங்கள் நீட்டிப்பு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால், நீங்கள் இன்னும் எவ்வளவு காலம், அல்லது எதுவரை கனடாவில் அதிகாரப்பூர்வமாக தங்கியிருக்கலாம் என்பது குறித்த விவரம் (திகதி) உங்களுக்கு அளிக்கப்படும்.

உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டாலோ. உங்கள் முந்தைய அனுமதியின்படி நீங்கள் படிக்கவோ, வேலை செய்யவோ முடியாது.

அப்போது நீங்கள் உங்கள் நிலையை மீட்க, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்புக்கு விண்ணப்பிக்க 90 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படும்.

அந்த அமைப்பு முடிவெடுக்கும் வரை, நீங்கள் காத்திருக்கலாம், ஆனால், படிக்கவோ வேலை செய்யவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது 

கடைசியாக, maintained statusஇன் போது நீங்கள் கனடாவில் சட்டப்படி தங்கியிருப்பதற்கு, நீங்கள் நீட்டிப்பு விண்ணப்பம் அளித்ததற்கான ஆதாரமே போதுமானது.

உங்கள் பள்ளியிலோ, வேலைத்தலத்திலோ அல்லது நீங்கள் மீண்டும் கனடாவுக்குள் நுழைய முயலும்போதோ அந்த ஆதாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.