மின்சாரக்கட்டணத்தை அதிகரித்தால் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்: வாசுதேவ

#Electricity Bill
Prathees
4 years ago
மின்சாரக்கட்டணத்தை அதிகரித்தால் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்: வாசுதேவ

எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய பிரிவினருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு நீர் வழங்கல் அமைப்பிற்கு ஒரு பிரச்சனையல்ல, ஆனால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சினையாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் செலவுகளை சமன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்கிறார் அமைச்சர்.

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோரைத் தவிர ஏனைய நுகர்வோருக்கான நீர்க் கட்டணத்தை அதிகரிக்க தமது அமைச்சு எதிர்பார்த்த போதிலும், நீர்க் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4