பயாகல கடற்கரையில் திடீரென தரையிறங்கிய சிறிய விமானம்

#SriLanka
Prathees
2 years ago
பயாகல கடற்கரையில் திடீரென தரையிறங்கிய சிறிய விமானம்

தொழிநுட்பக் கோளாறு காரணமாக சிறிய பறக்கும் விமானமொன்றை சிறிய பயாகல கடற்கரையில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் வடாஸ் ஜயசிங்க தெரிவித்தார். ரணவீர தெரிவித்தார்.

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 4ஆர். CSJesna ரக விமானத்தில் இரண்டு பயிற்சி பெற்ற விமானிகள் இருந்ததாகவும் இந்த விமானம் இரத்மலானையிலிருந்து கொக்கல நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

விமானப்படை தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைக் காண பெருமளவான மக்கள் திரண்டிருந்ததால் அவர்களைக் கட்டுப்படுத்த பயாகல பொலிஸார் கடுமையாகப் பிரயத்தனப்பட்டனர்.

இலகுரக விமானம் திடீரென தரையிறங்கியதையடுத்து, அதிகாரி ஒருவர் தலைமையில் 10 விமானப்படையினர் அடங்கிய அனர்த்த நிவாரணக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் கணக்காளர் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கோளாறிற்கு உள்ளான விமானத்தை அந்த இடத்திலேயே சரி செய்ய தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுக்குமென பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து குறித்த விமானத்தில் இருந்த விமானிகள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்,

அப்போது நாங்கள் சுமார் 1500 அடி உயரத்தில் இருந்தோம். 1000 அடியாகக் குறைக்கப்பட்டபோது குறித்த சூழ்நிலை குறித்து கட்டுகுருந்த விமானப்படை தளத்திற்கு தகவல் தெரிவித்தோம்.

அவர்கள்  வரச் சொன்னார்கள்.நாங்கள் வர முடியாது என்று கூறிவிட்டு கடற்கரையில் தரையிறங்கினோம்இ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் விமானத்தை கடற்கரையில் தரையிறக்கினோம்.

நாங்கள் இரத்மலானையிலிருந்து பிற்பகல் 1.05 மணியளவில் புறப்பட்டோம்.

மதியம் 1:30 மணியளவில் விமானத்தின் இன்ஜின் வேகம் வெகுவாகக் குறைந்தது. அதிகரிக்கப் பார்த்தோம். ஆனால் முடியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.