லஞ்சம் வாங்கிய அதிபர் கைது

#Arrest
Prathees
4 years ago
லஞ்சம் வாங்கிய அதிபர் கைது

பிள்ளையொன்றை பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற முற்பட்ட அதிபர் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.

கம்பஹாவில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிள்ளையை பாடசாலையில் தரம் 7 இல் சேர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிபர் 200இ000 ரூபாவை கோரியதாக குழந்தையின் பாதுகாவலர் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படிஇ விசாரணை அதிகாரிகள் பணத்தினைப் பெற்றுக்கொண்ட போதே அதிபர் அலுவலகத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிபர் ஆரம்ப விசாரணைகளின் பின்னர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4