பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைகளுக்கு அமெரிக்கா அனுமதி

Keerthi
4 years ago
பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைகளுக்கு அமெரிக்கா அனுமதி

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைகளுக்கு அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசியினை தீவிரமாக செலுத்தி வருகிறது. இந்நிலையில் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக paxlovid என்ற மாத்திரைகளை கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க நாட்டு மருத்துவ நிபுணர்கள்பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா சிகிச்சைக்கான paxlovid மாத்திரைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.

அதன்படி இனி வரும் காலங்களில் ஏதேனும் அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்கள் வீட்டிலிருந்தபடியே மேல் குறிப்பிட்டுள்ள மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அந்நாட்டின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த கொரோனாவுக்கு எதிரான paxlovid மாத்திரைகள் வேகமான தன்மையையும், குறைந்த பக்க விளைவுகளை கொண்டிருப்பதாக அமெரிக்காவின் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4