காதலை ஏற்ற பெண் ராணுவ வீராங்கனை கைது

Prasu
4 years ago
காதலை ஏற்ற பெண் ராணுவ வீராங்கனை கைது

நைஜீரிய நாட்டின் க்வாரா மாகாணம் இக்படா நகரில் ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு இளம் ராணுவ வீரர்/வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்த பயிற்சி மையத்தில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஜேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது உயர் அதிகாரியான ஷகினாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளார். ஷகினாவும் ஜேசனை காதலித்துள்ளார்.

இந்நிலையில், ஜேசன் தனது காதலியான ஷகினாவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’லவ் பிரப்போசல்’ செய்துள்ளார். ராணுவ பயிற்சி மையத்திலேயே ஷகினாவிடம் ஜேசன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, ஷகினாவும் ஜேசனின் காதலை ஏற்றுள்ளார். இவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இந்த ’லவ் பிரப்போசல்’ நிகழ்வை சக ராணுவ வீரர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ராணுவ பயிற்சி முகாமில் ராணுவ உடையில் இருந்த பெண் வீராங்கனை சக வீரரின் காதலை ஏற்றுக்கொள்ளும் இந்த வீடியோ உயர் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றது.

இதனை தொடர்ந்து ராணுவ நடத்தை விதிகளை மீறி ராணுவ உடையில் இருந்தபோது காதலில் ஈடுபட்டதாக அந்த பெண் ராணுவ வீராங்கனை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நைஜீரிய ராணுவ வீரர் வீராங்கனைகள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காதலை வெளிப்படுத்திய பெண் ராணுவ வீராங்கனை கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெண்ணின் உரிமைகளை பறிக்கும் செயல் என கூறியுள்ள பெண்கள் உரிமைகள் அமைப்பு இந்த நிகழ்வில் ஆண் ராணுவ வீரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4