இன்றைய வேத வசனம் 24.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 24.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

சாலொமோனுடைய ஞானம், தென் தேசத்து ராஜஸ்திரீயான சோபாவை பூமியின் எல்லைகளிலிருந்து ஈர்த்துக் கொண்டு வந்தது. அவள் தானாகவே வந்தாள். தான் சாலொமோனைப் பற்றிக் கேள்விப்பட்டவைகள் உண்மையாகவா இருக்கும் என்ற சந்தேகத்தோடு அவள் வந்தாள்.

இஸ்ரவேல் தேசத்திற்கு வந்து, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள் சாலொமோன் அவள் கேட்டவைகளை எல்லாம் விடுவித்தான். அவள் பரிசுகளை சாலொமோனுக்குக்  கொடுத்தாள். சாலொமோனிடமிருந்து அநேக பரிசுகளை பெற்றுக் கொண்டாள். முடிவில் தன் தேசத்திற்குத் திரும்பிப் போய்விட்டாள் (2 நாளா 9:1-12)

இப்படிதான் அனேகர் கிறிஸ்துவண்டை வருகிறார்கள். கிறிஸ்துவின் வல்லமையையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் காண்கிறார்கள். பின்பு உலகத்தின் ஆசை இச்சைகளுக்குத் திரும்பி போய்விடுகிறார்கள். ஆதி அன்பிலிருந்து விழுந்துபோகிறார்கள்.

வேதம் சொல்கிறது:- நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். (மத் 12:42)

ஆம், கிறிஸ்துவை விட்டு பின்வாங்கிச் செல்கிறவர்கள், எப்பொழுதுமே குற்றஞ் சுமத்துகிறவர்களாக, குறை கண்டுபிடிக்கிறவர்களாக மாறுகிறார்கள்.

சாத்தானைக் குறித்து:- இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். (வெளி 12:10). என்று வேதம் சொல்கிறது.

உங்கள் வாயில் மற்றவர்களைக் குறித்து குற்றம் சாட்டும் வார்த்தைகள் வந்தால், நீங்கள் கிறிஸ்துவை விட்டு தூரமாய் வந்துவிட்டீர்கள் என்று திட்டமாக அறிந்துக்கொள்ளலாம். இப்பொழுதே கண்ணீரோடு கிறிஸ்துவண்டை திரும்புங்கள். ஆமென்.

மத்தேயு 12:35
நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.