வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பதினான்கு வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய நபர்கள் கைது

#Arrest
Prathees
4 years ago
வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பதினான்கு வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய நபர்கள் கைது

14 வயது சிறுமியை நீண்ட காலமாக விபச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் உறவினரையும்இ சிறுமியை விலைக்கு வாங்கியதாக கூறப்படும் நபரையும் மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதானை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபரும் அவனது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான உறவின பெண்ணொருவர், சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்

 சிறுமியை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தனது வீட்டில் வைத்திருப்பதாக சிறுமியின் பெற்றோரிடம் கூறியதாகவும், சிறுமியை அழைத்துச் சென்று பல்வேறு தொழிலதிபர்களிடம் பணத்திற்காக விற்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 12 வயது முதல் இரண்டு வருடங்களாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமியை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் சந்தேக நபர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4