உணவு தடுப்பாடு ஏற்படாது – அமைச்சர் மஹிந்தானந்த உறுதிமொழி

Prabha Praneetha
4 years ago
உணவு தடுப்பாடு ஏற்படாது – அமைச்சர் மஹிந்தானந்த உறுதிமொழி

அடுத்த வருடம் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என தான் உறுதியளிப்பதாக  விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 90 தொடக்கம் 95 வீதமான நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் கூறுகின்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் கூறுகியுள்ளாா்.

இந்நிலையில், தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண செய்ய வேண்டியது விவசாய அமைச்சின் செயலாளர்களை நீக்குவது அல்ல, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை நீக்குவது என சமகி ஜனபலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் ஒரு செயலாளரால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4