ஏற்றுமதியில் வளர்ச்சியடைந்த இலங்கை!

Mayoorikka
4 years ago
ஏற்றுமதியில் வளர்ச்சியடைந்த இலங்கை!

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கடந்த  பத்து  வருடங்களுடன்  ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பரில்,   55.1 சதவீதத்தால் 1,215 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஆடை ஏற்றுமதி 52.7 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 500 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இறப்பர் ஏற்றுமதியும் 47 சதவீதம் அதிகரித்து 102.2 மில்லியன் டொலர்களாக உள்ளது.

அத்துடன், தேயிலை ஏற்றுமதி வருமானமும் 22.3 சதவீதம் அதிகரித்து 117.65 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன்,தேங்காய் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் 40.6 சதவீதம் அதிகரித்து 80 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது.

இலங்கையின் முக்கிய கொள்வனவாளர்களான ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தவிர, பெரும்பாலான ஏற்றுமதிகள் அமெரிக்காவுக்கே அனுப்பப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4