யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

Prabha Praneetha
4 years ago
யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழக மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஏ9 வீதியை மறித்து மீனவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் அவ்வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4