பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இளைஞர் சிக்கினார்!

Prasu
4 years ago
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இளைஞர் சிக்கினார்!
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
மெதிரிகிரிய பொலிஸ் நிலையத்தில் பதிவான மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் மோட்டார் சைக்கிள் எரித்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4