சுங்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் ஏழுபேர் கைது

Keerthi
4 years ago
சுங்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் ஏழுபேர் கைது

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று (24) 60 மில்லியன் வெளிநாட்டு நாணய தொகுதியை கடத்திய எழுவரை கைது செய்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தின் ஊடாக ஏழு பயணிகளும் வெளியேற முற்பட்ட போது, ​​சுங்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அவர்களது பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு நாணயங்கள் அமெரிக்க டொலர்கள், யூரோக்கள் மற்றும் ஸ்டேலிங் பவுண்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4