உருளைக் கிழங்கு மட்டன் மசாலா சமைத்துப்பாருங்கள்.

#Cooking
உருளைக் கிழங்கு மட்டன் மசாலா சமைத்துப்பாருங்கள்.

தேவையான பொருட்கள் : 

  • மட்டன் – 500 கிராம் 
  • உருளைக் கிழங்கு – 2 சிறியது 
  • வெங்காயம் – 1 பெரியது 
  • தக்காளி – 3 
  • இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி 
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி 
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி 
  • பச்சை மிளகாய் – 1 
  • சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பி னால்) 
  • பட்டை – சிறிய துண்டு 
  • கொத்த மல்லி – சிறிதளவு 
  • எண்ணெய் – தேவையான அளவு 
  • உப்பு – சுவைக் கேற்ப 
  • தண்ணீர் – தேவைக் கேற்ப 

செய்முறை : 

  1.  மட்டனை துண்டு களாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும். உருளைக் கிழங்கை சிறு துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். 
  2. வெங்காயம், தக்காளி, கொத்த மல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். 
  3. பிரஷர் குக்கரில் எண்ணெய்யை சூடாக்கி, உருளைக் கிழங்கு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். 
  4. அவற்றை குக்கரில் இருந்து நீக்கி தனியாக வைக்கவும். 
  5. அடுத்து குக்கரில் பட்டை மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கிய பின் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 
  6. இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து கிளறி 5 நிமிட ங்கள் வதக்கவும். 
  7.  அடுத்து அதில் மட்டன் துண்டுகளை உப்புடன் சேர்த்துக் 5 நிமிடங்கள் கிளறவும். 
  8. குக்கரை மூடி 3 விசில் வைத்த பின் அடுப்பின் தீயை குறைத்து 15 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். 
  9. பிரஷர் அடங்கிய வுடன் மூடியைத் திறந்து மிதமான சூட்டில் குழம்பு கெட்டி யாகும் வரை கொதிக்க விடவும். 
  10. திக்கான பதம் வந்ததும் கொத்த மல்லி இலை தூவி இறக்கவும். 
  11. சுவையான உருளைக் கிழங்கு மட்டன் மசாலா ரெடி