இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி தீர்மானம் !

#SriLanka
Nila
2 years ago
இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி தீர்மானம் !

அத்தியாவசியப் பொருட்களுக்கு டொலர்களை செலவிடுவதை விட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மாதங்களில் 500 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் செலுத்தவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1500 இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் டொலர்கள் வழங்கப்படாமையால் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலர்களை விடுவிக்குமாறு வர்த்தக அமைச்சு மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கொள்கலன்களை வெளியிட 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் தேவைப்படும் நிலையில், இதற்கான டொலர்களை வெளியிட குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதமாவது தேவைப்படும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.