வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு!

Mayoorikka
4 years ago
வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு!

நத்தார் தினமான இன்று ஹட்டன் - ருவன்புர பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் இன்று (25) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் அடுப்பு சேதமடைந்துள்ளது.

குறித்த அடுப்புடன் இணைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டரினை ஒரு மாதத்துக்கு முதல் ஹட்டன் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கொள்வனவு செய்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4