கனடாவில் 19 வயது தமிழ் இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் - நண்பர் கைது!

Reha
4 years ago
 கனடாவில் 19 வயது தமிழ் இளைஞர்  கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் - நண்பர் கைது!

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடியன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகீசன் , 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 23ஆம் திகதி முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாக போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 19 வயதான அனோஜ் என்ற இன்னொரு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது இரண்டாம்நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் இச்சம்பவம் பற்றி மேலும் தகவல் அறிந்தவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4