மூன்று வயது பெண் குழந்தை பரிதாப மரணம்!

#Death
Prasu
4 years ago
மூன்று வயது பெண் குழந்தை பரிதாப மரணம்!

குருநாகல், மதுராகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடம்கஸ்லந்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மூன்று வயது பெண் குழந்தை மீது இரும்பு நுழைவாயில் விழுந்ததில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை ரிதிகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றும்போது குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காகக் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையானது அதே வயதுடைய மற்றுமொரு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4