புத்தாண்டில் புதிய மாற்றத்தை நோக்கி நகரும் அரசாங்கம்!

Prabha Praneetha
4 years ago
புத்தாண்டில் புதிய மாற்றத்தை நோக்கி நகரும் அரசாங்கம்!

புத்தாண்டு தொடக்கத்தில் அமைச்சரவை, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.

நட்டத்தில் செல்லும் நிறுவனங்களின் தலைவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டார்.

நாட்டில் அரச நிறுவனங்களால் திறம்பட நடத்தப்படும் சுமார் ஐம்பத்திரண்டு நிறுவனங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் சிலர் அமைச்சரை புறக்கணித்து வருவதாகவும் அவர்களுடன் இணைந்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருப்பதாகவும் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4