இன்றைய வேத வசனம் 26.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 26.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவம்

வேதத்தை நேசித்த ஒரு தேவ மனிதர் ஒரு பெரிய விபத்தில் சிக்கிக்கொண்டார். அவருடைய முகம் உருக்குலைந்து போய் பார்வையும் பறிபோனது.

இரண்டு கைகளையும் இழந்து போனார். வேதத்தின் மீதுள்ள வாஞ்சையால் பிரெயில் எழுத்துள்ள வேதாகமம் ஒன்றை வாங்கி, மற்றவர்கள் மூலம் அதன் வடிவத்தை கண்டறிந்து உதடுகள் மூலம் அதை உச்சரிக்க முயன்றார்.

ஆனால் உதடுகளில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்பட்டு இருந்ததால் உதடுகளால் அவரால் வாசிக்க முடியவில்லை.

அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது தன் நாவினால் அந்த பிரெயில் எழுத்துக்களை உணரந்து வாசிக்க முடிவு செய்தார்.

அவர் நாக்கினால் பிரெயில் எழத்துக்களை உணர முடிந்தது.

உங்களால் நம்பமுடிகிறதா? தன் நாவினால். அவர் வேதாகமத்தை நான்கு முறை வாசித்து முடித்தார்.

நாம்மாக இருந்திருந்தால் இப்பெரிய விபத்தை அனுமதித்த ஆண்டவரை மறுதலித்து மறந்துபோயிருப்போம்.

ஆண்டவர் நமக்கு தெளிவான கண் பார்வையை கொடுத்திருக்கிறார் .அந்த கண்களினால் நாம் தினமும் வேதத்தை வாசிக்கிறோமா?

முழு வேதாகமத்தையும் முழுமூச்சாக நாம் வாசிப்போமானால் 75 மணி நேரத்தில் வாசித்து முடிக்கலாம்.

ஆனால் நம்மில் பலர் 75 வயதானாலும், வேதாகமத்தை ஒருமுறைகூட வாசித்து முடித்து இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

ஆண்டவரே உமது வார்த்தைகளை நாம் எவ்வளவாய் நேசிக்கிறான் நாள் முழுவதும் அதையே நான் தியானிக்கிறேன். என்று நம்மால் கூற முடியுமா?

என்பதை சிந்திப்போம்..!

சங்கீதம் 1:2,3

2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.