புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களால் தமிழர் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களால் தமிழர் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை!

புலம்பெயர் நாடொன்றில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபரின் செயற்பாடு குறித்து மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 

 பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் சில பெண்களுடன் தகாத முறையில் நடந்த கொண்ட நிலையில், மக்களால் எச்சரிக்கப்பட்டுள்ளார். 

 குருவிக்காட்டுப் பகுதியில் சொகுசு கார் ஒன்றில் இரு யுவதிகளும் வந்த 50 வயதான நபரின் செயற்பாடு குறித்து அந்த பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

 குறித்த பெண்களுடன் சமூகசீர்கேடான முறையில் நடந்த கொண்டமையால் மக்கள் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். 

 எனினும் அந்தப் பகுதியிலுள்ள கோவில் ஒன்றிற்கும், பறவைகளைப் பார்ப்பதற்காகவும் தாங்கள் வந்தாக அவர்கள், மக்களிடம் தெரிவித்துள்ளனர். 

 குறித்த அதிசொகு காருக்குள் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் காணப்பட்டதாகவும், இவ்வாறான சமூக சீர்கேடான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்து அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

 அண்மைக்காலமாக புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகம் செல்லும் சிலரின் செயற்பாடுகள் புலம்பெயர் தமிழர்களுக்கு அவமானத்தை ஏற்படுவதாக அமைந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ளும் வயதான நபர்கள், இவ்வாறு யுவதிகளுக்கு ஆசை வார்த்தை காட்டி தமது இச்சைகளை தீர்த்துக் கொள்வதாக மக்கள் கடும் விசம் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!