மரக்கறி ஒம்லெட் சுடுவது எப்படி?
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையானவை:
- கடலைப் பருப்பு – 50 கிராம்,
- துவரம் பருப்பு – 50 கிராம்,
- பாசிப் பருப்பு – 50 கிராம்,
- உளுந்து, முந்திரி,
- மக்காச்சோளம் – 50 கிராம்,
- முழு கோதுமை – 50 கிராம்,
- பச்சை மிளகாய் – 2,
- பெரிய வெங்காயம் – 1,
- கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு – சிறிதளவு.
செய்முறை:
- கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச் சோளம், கோதுமை ஆகிய வற்றைத் தனித்தனி யாக வறுத்து, ரவை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
- இதனுடன், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக் கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.