முட்டை, கோழி இறைச்சி விலையில் மாற்றமா?

Prabha Praneetha
2 years ago
முட்டை, கோழி இறைச்சி விலையில் மாற்றமா?

தற்போது சந்தைகளில் முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியன அதிக விலையிலேயே விற்பனையாவதாகவும், முட்டையின் விலையை 50 ரூபாவுக்கும் கோழி இறைச்சியை 1000 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கான எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தாா்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டாா். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முட்டையொன்று 50 ரூபாவுக்கும் கோழி இறைச்சி 1 கிலோகிராம் 1000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில் அவ்வாறானவொரு நிலைமையே கடந்த காலங்களில் உருவாகி வந்தது. ஆனால் மேற்குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்யும் நிலை உருவாகவில்லை.

மேலும், சோளம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் கோரியிருந்தோம். அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒரு கிலோவுக்கு 25 ரூபா வரி அறவிடப்பட்ட நிலையில்,  அதன்பின்னா் அந்த தொகை 10 ரூபாவாக குறைக்கப்பட்டது. அதனால், சாதாரணமாக உணவு உற்பத்தி வீதம் 20 ரூபாவால் குறைவடைந்தது.

அரிசி, விற்றமின், சோயா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாட்டு நிலையும் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கம் எங்களுக்கு நிவாரணம் வழங்குமென எதிர்பார்க்கிறோம்.

முட்டை 50 ரூபாவுக்கும் கோழி இறைச்சி 1000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது என கருதி நுகர்வோர் கவலைபடவேண்டியதில்லை.

தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பன அதிகப்பட்ச விலையிலேயே விற்பனையாகின்றன.சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதனால், விலை அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லையென நான் நம்புகிறேன்.

அதேபோன்று எதிர்காலத்தில் உற்பத்தி செலவு அதிகரிக்குமாக இருந்தால் அரசாங்கத்துடன் கலந்துரையாடி உற்பத்தி வீதத்தை குறைத்துக்கொள்ளவே  எதிர்பார்க்கிறோம்.

முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

சோயா, விற்றமின், மருந்து வகைகளில் தட்டுப்பாடு ஒருபுறம் இருந்தாலும் நுற்றுக்கு 50 வீதத்தால் விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள டொலர் பிரச்சினையினாலே இந்த சிக்கல் நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு கிடைக்கும் என்று குறிப்பிட்டாா்.

நுகர்வோருக்கும் மின விரைவாக சமைத்து உட்கொள்ளக்கூடிய உணவாக முட்டை காணப்படுகின்றது. 50 ரூபாய்க்கு முட்டை விற்பனையாகவில்லை. 25 ருபாவிலிருந்து 26 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது.