SWISS விமானங்களை ரத்து செய்ய திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல்..!!!!

Keerthi
2 years ago
SWISS விமானங்களை ரத்து செய்ய திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல்..!!!!

சுவிட்சர்லாந்து விமான நிறுவனமான SWISS இது குளிர்காலம் என்பதால் 2,900 விமானங்களை ரத்து செய்ய திட்டமிட்டு உள்ளது.

SWISS இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் "கட்டுப்பாடுகள் மற்றும் தேவை" காரணமாக அக்டோபர் 2021-மார்ச் 2022 வரை தன் விமான அட்டவணையைக் குறைத்துக் கொண்டது. அதிலும் குறிப்பாக 2022 ஜனவரி நடுப்பகுதியிலிருந்து மார்ச் இறுதி வரை உள்ள ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 2,900 விமானங்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,200 சமீபத்தில் முன்பே ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை SWISS செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையில் பெரும்பாலும் முழு நெட்வொர்க்கிலும் விமானங்கள் தடை செய்யப்படுவதாக கூறியுள்ளது. எனினும் அடிக்கடி சேவை செய்யும் வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் காரணமாக முடிந்தவரை பல இணைப்புகள் இருக்கும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அதற்கு ஏற்றவாறு தெரிவிக்கப்பட்டு மாற்று வழிகள் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே குளிர்கால விமான அட்டவணையில் SWISS-ன் தாய் நிறுவனமான Lufthansa குழு ரத்து செய்ய வேண்டிய 33,000 விமானங்களில் இது 9 சதவீதம் ஆகும்.

லுஃப்தான்சா குழுமத்தினுடைய விமானத் திட்டத்தில் 15 சதவீதம் SWISS விமானங்கள் பிரதி நிதித்துவம் செய்கின்றது. பல ஊடக அறிக்கைகளின்படி, கிறிஸ்துமஸ் காலத்தில் உலகம் முழுவதிலும் சுமார் 4,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவை தளமாக கொண்ட விமான நிறுவனங்களே கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் லுஃப்தான்சாவும் பல்வேறு விமானங்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.