மக்கள் ஆணையை மதித்து ஆட்சி நடத்துகின்றது அரசு! - 'மொட்டு' எம்.பி. கூறுகின்றார்

Reha
2 years ago
மக்கள் ஆணையை மதித்து ஆட்சி நடத்துகின்றது அரசு! - 'மொட்டு' எம்.பி. கூறுகின்றார்

"நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்தே அரசு ஆட்சி நடத்துகின்றது. கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடாக எமது நாடு முன்னிலை வகிக்கின்றது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"பொருளாதார பலமிக்க நாட்டையே 2019ஆண்டு நவம்பர் மாதம் கையளித்ததாக எதிர்க்கட்சியால் கூறமுடியாது. ஏனெனில், அவர்களால் வெற்றிகரமாக நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதன் காரணமாகவே மக்களின் ஆணை எமக்குக் கிடைத்தது.

2015ஆம் ஆண்டு எதிரணி நாட்டைப் பொறுப்பேற்கும்போது நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு காணப்பட்டது, ஐந்து வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு உயர்த்தினோம், தனிநபர் வருமானம், டொலர் இருப்பு எவ்வாறு இருந்தது, நாட்டின் சொத்துக்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன, உட்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு மேம்படுத்தினோம், பொருளாதார பலமிக்க நாட்டையே நாம் கையளித்தோம் என்றவாரெல்லாம் எதிர்க்கட்சியால் கூறமுடியாது.

எதிர்க்கட்சியால் வெற்றிகரமாக நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாததன் காரணமாகவே நாட்டை ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கினர்" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!