சினிமா பாணியில் காதலியை துரத்தி சென்ற காதலன் உயிரிழப்பு

#United_States #Accident #Death
Prasu
4 years ago
சினிமா பாணியில் காதலியை துரத்தி சென்ற காதலன் உயிரிழப்பு

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் போனிக்ஸ் நகரைச் சேர்ந்த ஒரு நபர், சம்பவத்தன்று அவரது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காதலி அவரை திட்டிவிட்டு காரில் வேகமாக சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், காதலியின் காரை ஹாலிவுட் ஸ்டைலில் துரத்திச் சென்றுள்ளார்.

காதலியின் காரின் பின்புறம் பலமுறை மோதியிருக்கிறார். எனவே, காதலி தனது காரின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளார். அவரை துரத்திச் சென்ற காதலன் ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளார். 

அப்போது அவரது கார்  திடீரென எதிர்ப்புற சாலைக்கு பாய்ந்து சென்றது. சிறிது நேரத்தில் எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே காதலன் உயிரிழந்தார். எதிரே வந்த காரின் டிரைவர் பலத்த காயமடைந்துள்ளார். அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து பொது பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘அந்த நபர் வேண்டுமென்றே தவறான பாதையில் சென்றாரா, அல்லது விபத்தா? என்பது உறுதியாக தெரியவில்லை. காதலிக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. அவர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த சொகுசு காரின் டிரைவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றே தெரிகிறது’ என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4