பால்கனியில் துணி காயப்போட தடை - துபாய் அரசு

Prasu
4 years ago
பால்கனியில் துணி காயப்போட  தடை - துபாய் அரசு

துபாயில் அடுக்குமாடி கட்டிடங்கள் பல உள்ள நிலையில் அந்த கட்டிடங்களில் வசிப்போர் துணி காயப்போடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு மாடியின் பால்கனியை உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுக்குமாடிகளில் குடியிருப்போர் தங்களது பால்கனியின் அழகை பராமரிக்க வேண்டும் என துபாய் அரசு கூறியுள்ளது. மேலும் பால்கனியின் துணி காய வைத்தல், சிகரெட் துகள்களை பால்கனியிலிருந்து கொட்டுதல், குப்பைகளை கொட்டுதல், பறவைகளுக்கு பால்கனியில் உணவளித்தல், தொலைக்காட்சி ஆண்டனாக்களை பால்கனியில் பொருத்துதல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இவற்றை செய்தால் 500 முதல் 1,500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4