பாக்சிங் டே டெஸ்டில் இங்கிலாந்தை வென்று தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலிய

Prasu
2 years ago
பாக்சிங் டே டெஸ்டில் இங்கிலாந்தை வென்று தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலிய

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்டான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 50 ரன் எடுத்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 267 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இது இங்கிலாந்து அணியை விட 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க வீரர் ஹாரிஸ் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்து 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டு, ராபின்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், ஜேக் லீச் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணியினரின் பந்து வீச்சில் இங்கிலாந்து திணறியது.

இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றும் ஆஸ்திரேலிய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தி விக்கெட் வேட்டையை நடத்தினர். இதனால் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் மளமளவென சரிந்தன.

இறுதியில், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 68 ரன்னுக்கு சுருண்டது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இரட்டை இலக்கை தொட்டனர், மற்றவர்கள் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், ஆஷஸ் தொடரில் 3-0 என கைப்பற்றி அசத்தியது.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலண்ட் 4 ஓவர் வீசி வெறும் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டு வீழ்த்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!