இரணைமடுவில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்ட பாரிய போராட்டம்:

#SriLanka #iranaimadu kulam #Farmer #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
1 hour ago
இரணைமடுவில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்ட பாரிய போராட்டம்:

கடந்த 25-02-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் மீதும் ஏனைய கமக்காரர் அமைப்புக்கள் மீதும் ஊழல் இடம்பெறுவதாக தெரிவித்த

குற்றச்சாட்டை விசாரிக்க கோரி ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரிடம் மகஜர் கையளிக்கும் நோக்குடனும் விவசாயிகள் மீதான பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்க வலியுறுத்தி இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன 28அமைப்புக்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காக்கா கடைச்சந்தியிலிருந்து ஆரம்பித்த போராட்டமானது பேரணியாக மாவட்ட செயலகம் வரை வந்து மாவட்ட அரசாங்கதிபரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்திருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் விவசாய அமைப்புக்கு எதிராக செயற்படும் இருவரின் கொடும்பாவிகளும் விவசாயிகளினால் எரிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் நாநூருக்கும்மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!